Friday, March 29, 2024

தன்னலமற்ற வில்லனுக்குப் பிறந்தநாள்!!

Must Read

இன்று ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ‘சோனு சூட்’ தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

பாலிவுட் நடிகர் ‘சோனு சூட்’

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் நடிகர் சோனுவிற்கு அனைவரும் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தொிவித்துள்ளனா்.

அப்படியா!! ⇒⇒வந்தாச்சு சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் !! சிறப்பம்சங்கள் என்ன!!

2010 சூப்பர்ஹிட் படமான ‘தபாங்கில்’ வில்லனாக நடித்ததற்காக மதிப்புமிக்க விருதுகளை வென்ற சோனு சூட், பாலிவுட்டின் மிகப் பெரிய பிரபலங்களான சல்மான் கான், ஷாருக் கான், ரித்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த படம் தமிழில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் சிம்பு ஹீரோவாகவும் சோனு வில்லனாகவும் நடித்து வெளிவந்தது குறிப்பிடத்தக்கது

ரியல் ஹீரோ

கடந்த சிலமாதங்களாக, நடிகர், தனது குழந்தை பருவ நண்பர் நிட்டி கோயலுடன் சேர்ந்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மார்ச் மாதத்தில் உணவு விநியோகிப்பதன் மூலம் தொடங்கி 500 பாக்கெட் சமைத்த உணவு மற்றும் மளிகைப் பொருட்களுடன், தினமும் உணவு மற்றும் மளிகை பொருட்களை 45,000 மக்களுக்கும், சேரிகளில், சாலைகளில் சிக்கித் தவிக்கும் மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பவர்களுக்கும் விநியோகிக்கிறாா்.

மேலும் மே மாதம் முதல் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நூற்றுக்கணக்கான பேருந்துகளை தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளார் ‘ சோனு சூட்’.

சோனுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கொரானோ நெருக்கடியில் பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகா் சோனுவை ‘ரியல் ஹீரோ’ , ‘மனிதநேயத்தின் விளக்கம்’ என்று கூறியுள்ளனா். அவரது ட்விட்டா் பக்கத்தில் ரசிகா்கள் மட்டுமின்றி பலரும் தங்களது வாழ்த்துக்களை தொிவித்துள்ளனா்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -