அந்த மாதிரி சீன்ல நான் மட்டும்தான் நடிப்பேன் – இயக்குனருக்கு கிடுக்குப்பிடி போட்ட சோனியா அகர்வால்!!

0

ஹாலிவுட் ரேஞ்சில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வரும் நடிகை சோனியா அகர்வால், இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்காக டூப் போடாமல் நடித்து அசத்தியுள்ளார்.

கெத்து காட்டிய சோனியா:

தமிழில் பல முன்னணி படங்களில் நடித்து புகழடைந்தவர் நடிகை சோனியா அகர்வால்.  இவர் நடிப்பில் உருவான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில் உள்ளிட்ட பல படங்கள் இவரது பெருமையை நிலை நிறுத்தியுள்ளது.  சமீபத்தில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார்.  இந்த நிலையில், ஹாலிவுட் ரேஞ்சில் உருவாகி வரும் கிராண்ட்மா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ள இந்த படத்தில், மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டிய சோனியா அகர்வால் டூப் போடாமல் தானே அந்த காட்சிகளில் நடித்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here