இரண்டு தடவை வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ்.., பேசி மழுப்பி சென்ற பிரபல நடிகர்!!

0
இரண்டு தடவை வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ்.., பேசி மழுப்பி சென்ற பிரபல நடிகர்!!
இரண்டு தடவை வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ்.., பேசி மழுப்பி சென்ற பிரபல நடிகர்!!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் திரை பயணத்தை ஆரம்பித்து, தற்போது முன்னணி நடிகர்களுடன் கூட்டணி வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அதன்படி விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படம், உலக நாயகனை வைத்து விக்ரம் திரைப்படமும் எடுத்து அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து வருகிறார். தற்போது விஜய் உடன் மீண்டும் இணைந்து தளபதி 67 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த படத்தில் விஜய் 40 வயது கேங்ஸ்டர் ஆகவும், அதற்கு வில்லனாக ஏழு பேர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி கேஜிஎப் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரித்விராஜ், மன்சூர் அலிகான் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த நிலையில் லோகேஷ் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்தும் தட்டி கழித்த நடிகர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அது வேற யாரும் இல்லைங்க நடிகர் சியான் விக்ரம் தான்.

என்ன பற்றி A டூ Z தெரிஞ்சா ஒரே ஆள் இவங்க மட்டும்தான்., ரகசியங்களை உடைத்த ரக்ஷிதா!!

கமல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கடைசியாக 5 நிமிடத்தில் வந்தாலும் கூட மாஸ் காட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு முன்னர் சியான் விக்ரம் இடம் தான் லோகேஷ் கனகராஜ் அனுகியிருந்தார். ஆனால் இதில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்று விக்ரம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது தளபதி 67ல் நடிப்பதற்கு மீண்டும் விக்ரம் இடம் பேச்சுவார்த்தை நடத்திய லோகேஷிடம் இந்த கதாபாத்திரத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்று மீண்டும் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here