3வது குழந்தை பொறந்தாச்சு.., மீண்டும் ஒரு குழந்தைக்கு அப்பாவான நடிகர் சிவகார்த்திகேயன்.., ரசிகர்கள் வாழ்த்து!!

0
3வது குழந்தை பொறந்தாச்சு.., மீண்டும் ஒரு குழந்தைக்கு அப்பாவான நடிகர் சிவகார்த்திகேயன்.., ரசிகர்கள் வாழ்த்து!!

தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மெல்ல மெல்ல தனது கேரியரில் முன்னேறி இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மீண்டும் தந்தையாகி உள்ளதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதையும் பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும், குகனிற்கும்  தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here