சிவகார்த்திகேயன் SK21 படப்பிடிப்புக்கு தடை.., காஷ்மீரில் இருந்து திரும்பிய படக்குழு!!

0
சிவகார்த்திகேயன் SK21 படப்பிடிப்புக்கு தடை.., காஷ்மீரில் இருந்து திரும்பிய படக்குழு!!

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ள நிலையில் இப்படம் திரை வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர் தனது 21வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் பூஜை 2 நாட்களுக்கு முன் நடந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் நிலையில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் பயனாளர்களே., இனி ரீல்ஸ் வீடியோவில் இந்த அம்சமும் கிடைக்கும்?? சூப்பர் தகவல்!!!

இந்த நேரத்தில் இப்படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் செப்டம்பர் மாதம் ஜி 20 மாநாடு நடக்கவிருப்பதால் காஷ்மீரை சுற்றி இருக்கும் பகுதிகளில் அரசு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இப்படப்பிடிப்பிற்கு தற்போது தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here