தூக்கி விட்ட படத்தை மீண்டும் தூசி தட்டும் சிவகார்த்திகேயன்..பிரின்ஸ் பட தோல்வியால் அதிரடி முடிவு!!

0
தூக்கி விட்ட படத்தை மீண்டும் தூசி தட்டும் சிவகார்த்திகேயன்..பிரின்ஸ் பட தோல்வியால் அதிரடி முடிவு!!
தூக்கி விட்ட படத்தை மீண்டும் தூசி தட்டும் சிவகார்த்திகேயன்..பிரின்ஸ் பட தோல்வியால் அதிரடி முடிவு!!

இயக்குனர் பொன்ராம் படைப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் குறித்து தற்போது முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்:

கோலிவுட்டில் நடிகர் விஜய்யை தொடர்ந்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து போனவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம், ரசிகர்களை கவரவில்லை என்றாலும், குழந்தைகளை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மடோன் அஸ்வின் படைப்பில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் படத்தில் சிவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் பொன்ராம். தற்போது இவர் விஜய்சேதுபதியை வைத்து DSP என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 2ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

முக்கிய சீரியலில் கமிட்டான பாக்கியலட்சுமி ராதிகா.., ரசிகர்களுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட்!!

இந்த படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன் பார்ட் 2 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான கதை எழுதும் பணியில் பொன்ராம் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினிமுருகன் 2வில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here