
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் பல தடைகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் உடைத்து தற்போது முன்னணி ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வருகிறார். தற்போது மடோன் அஸ்வின் இயக்கி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சமீபத்தில் படத்தின் போஸ்டர் மற்றும் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்த கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் நடத்தி வரும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார்.
மேலும் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தை குறித்து இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் அதிரடியாக ஆரம்பமாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.