சிவகார்த்திகேயனின் மாமியாரை பார்த்துள்ளீர்களா? முக்கிய விழாவில் எடுத்துக்கொண்ட ஃபேமிலி போட்டோ!!

0
சிவகார்த்திகேயனின் மாமியாரை பார்த்துள்ளீர்களா? முக்கிய விழாவில் எடுத்துக்கொண்ட ஃபேமிலி போட்டோ!!
சிவகார்த்திகேயனின் மாமியாரை பார்த்துள்ளீர்களா? முக்கிய விழாவில் எடுத்துக்கொண்ட ஃபேமிலி போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான, சிவகார்த்திகேயனின் மாமியார் போட்டோ இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் :

விஜய் டிவி கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம், தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது வெள்ளி திரையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுபோக தற்போது, மாவீரன் என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இவர் விஜய் டிவியில் வேலை பார்த்த போது, அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு இவரது சொந்த மாமன் மகளான ஆர்த்தி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் தாஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி .., படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்!!

சிவகார்த்திகேயன் தனது சொந்த மாமன் மகன் என்றாலும், தங்கள் திருமணம் காதல் திருமணம் இல்லை என்றும், தன் அம்மாவின் விருப்பத்தின் பேரில் சிவகார்த்திகேயனை மணந்து கொண்டதாக ஆர்த்தி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது, சிவகார்த்திகேயன் மாமியாரான ஆர்த்தி அம்மா போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆர்த்தி வளைகாப்பில் எடுத்துக்கொண்ட இந்த ஃபேமிலி போட்டோ, தற்போது இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here