என்னடா சொல்றீங்க.., அதிதிக்கு இப்படி ஒரு நிலைமையா?? இனி அம்மணி ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இருக்காதே!!

0
என்னடா சொல்றீங்க.., அதிதிக்கு இப்படி ஒரு நிலைமையா?? இனி அம்மணி ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இருக்காதே!!
என்னடா சொல்றீங்க.., அதிதிக்கு இப்படி ஒரு நிலைமையா?? இனி அம்மணி ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இருக்காதே!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மாவீரன் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு பிறகு குழந்தைகளை அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் 100 கோடியை வசூலித்து சிவாவின் மார்க்கெட்டை உயர்த்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கிய பிரின்ஸ் திரைப்படம் சிவாவின் சினிமா கேரியரில் இது மாதிரியான தோல்வியை பார்த்ததில்லை. அந்த அளவிற்கு இப்படம் கடுமையான விமர்சனம் பெற்று வசூலில் மண்ணை கவ்வியது. தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் பிரின்ஸ் கதை ஆகிற கூடாது என்பதற்காக சிவா கவனமாக நடித்து வருகிறாராம். மேலும் இந்த படத்தில் சிவாவிற்கு ஜோடியாக அதிதி நடித்து வருகிறார். அதிதி சினிமாவில் கால் பதித்த கொஞ்ச நாளிலேயே முன்னணி நடிகர்களுடன் இணைய ஆரம்பித்து விட்டார். கண்டிப்பாக இந்த படம் வெற்றிக்கனியை எட்டும் என்று படக்குழுவினர் உறுதியாக உள்ளனர்.

RRR படத்தின் 2வது பார்ட் வருமா? வராதா? பேட்டியில் ஓப்பனாக போட்டு உடைத்த இயக்குனர் ராஜமவுலி!!

இப்படி இருக்க, இப்படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம், ஆடியோ ரைட்ஸ் மற்றும் தியேட்டர் ரிலீஸ் பிசினஸ் என இப்பவே 95 கோடி ரூபாய் பிசினஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து விட்டால் கண்டிப்பாக அதிதியை கையில் பிடிக்க முடியாது. ஏனெனில், விருமன் படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே, எந்த யூடியூப் சேனலை ஓபன் செய்தாலும் அதில் அதிதி தான் இருந்தார். அப்படி இருக்க இப்பொழுது இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தால், அடுத்த ட்ரெண்டிங் நாயகி நம்ம அதிதி தான்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here