முக்கிய சாதனையில் இணைந்த டாக்டர் திரைப்படம் – படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான டாக்டர் படம் 25 நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சாதனை செய்த டாக்டர்:

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, அர்ச்சனா நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான படம் டாக்டர்.  கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு ரசிகர்களை திரையரங்குக்கு வர வைத்த பெருமை இந்த படத்திற்கு உண்டு.

சிறந்த காமெடி பேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ள டாக்டர், நான்கு வாரங்களுக்கு மேலாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த நிலையில், இந்த படம் வெளியாகி 25 வது நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது.  இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here