சிவகார்த்திகேயன் நடித்த “அயலான் ” படத்தால் இத்தனை கோடி நஷ்டமா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சிவகார்த்திகேயன் நடித்த “அயலான் ” படத்தால் இத்தனை கோடி நஷ்டமா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான திரைப்படம் தான் அயலான். இத்திரைப்படம்  ரசிகர்களுக்கு இடையே கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. மேலும் பாக்ஸ் ஆபீஸில் கூட எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.
தற்போது இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் உலா வருகிறது. அதாவது இத்திரைப்படம் தயாரிப்பாளருக்கு ரூபாய் 8.75 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் 95.5 கோடி எனவும் அதன் பிசினஸ் ரூபாய் 86.75 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here