அவதூறு பேச்சால் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்.., இவருக்கா இந்த நிலைமை??

0

நடிகர் சிவகார்த்திகேயன் தனது திறமையால் முன்னுக்கு வந்து தற்போது சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்குகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற காமெடி நடிகர் சூரியுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் வாயில் நுழையாத வித்தியாசமான மொழியில் பேசி அசத்திருப்பார்கள். இந்த காமெடி காட்சிக்கு சிரிக்காத ரசிகர்கள் இருக்க முடியாது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். அவர் மேடையில் பேசும் போது கொரிய மக்களை அவதூறாக கூறியுள்ளார்.

அதாவது அவர் கூறியதாவது, “நான் கொரியன் படம் பார்க்கும் போது யாரு ஹீரோ யார் ஹீரோயின் எனக்கு தெரியாது, ஏனென்றால் அங்கு ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி இருப்பார்கள், இந்த படத்தில் அந்த காட்சி பார்த்தால் டென்ஷன் ஆகிர்வார்கள்” என்று பள்ளி மாணவர்கள் முன் பேசியுள்ளார். காமெடியாக பேசுவதன் பெயரில் கொரியா மக்களை அவதூறாக பேசியதை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் விரைவில் மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here