நடிகர் கமலுடன் இணையும் சிம்பு….,பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….,

0
நடிகர் கமலுடன் இணையும் சிம்பு....,பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்....,
நடிகர் கமலுடன் இணையும் சிம்பு....,பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்....,

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் 48 ஆவது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஒபேலி என். கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பத்துதல’. இந்த திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் கை கோர்க்க இருக்கிறார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே நடிகர் துல்கர் சல்மானை வைத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

படம் பார்க்க ரூ.82 ஆயிரம் சம்பளம்…..,அடடா இதல்லவா வாய்ப்பு…..,

இப்போது, தேசிங்கு இயக்கும் புதிய திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக இருக்கும் என்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இது பிடித்தமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் STR48 படத்தை தயாரிப்பதால் அவரை சந்தித்து நன்றி கூறி இருக்கிறார் நடிகர் சிம்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here