சிம்பு மீது காதல்., எங்க கல்யாணம் இப்படி தான் நடக்கும் – திடீரென குண்டை தூக்கி போட்ட இளம் நடிகை!

0
சிம்பு மீது காதல்., எங்க கல்யாணம் நடந்த இப்படி தான் நடக்கும் - திடீரென குண்டை தூக்கி போட்ட இளம் நடிகை!!

நடிகர் சிம்புவுடன், வெந்து தணிந்தது காடு படத்தில் ஜோடியாக நடித்துள்ள சித்தி இதானி, சிம்பு குறித்த சுவாரஸ்ய காதல் கதை ஒன்றை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஓபன்டாக் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிம்பு, தனது மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் நேற்று வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட் படைத்துள்ளது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, ஏதாவது ஒரு சுவாரஸ்ய கற்பனை கதை ஒன்றை சொல்லுங்கள் என நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு நடிகை, இந்த கற்பனைக் கதையில் நானும் சிம்புவும் பள்ளி பருவ காதலர்கள். எனது தந்தையாக ரஜினிகாந்த்தும், சிம்புவின் அண்ணனாக உதயநிதி ஸ்டாலினும் இருக்க வேண்டும்.

எங்கள் காதல் விவகாரம் அவர்களுக்கு தெரிந்து, இருவரும் சேர்ந்து கல்யாணம் செய்து வைத்தால் சூப்பராக இருக்கும் என தெரிவித்தார். இந்த கற்பனை கதை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here