
இயக்குனர் கிருஷ்ணா படைப்பில் நடிகர் சிலம்பரசன் நடித்த “பத்து தல” திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
பத்து தல:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. தற்போது சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா படைப்பில் உருவான “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார். அதுபோக நடிகர் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக்காக உருவான பத்து தல படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் நம்ம சத்தம் பாடல் சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பத்து தல படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சிம்புவின் தாதா கதாபாத்திரம் சும்மா பின்னி பெடலெடுத்து உள்ளது.
பிரம்மாண்டம் காட்டும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா.., Chief Guest இவர் தானா??
நடிகர் கௌதம் கார்த்திக்கின் எதார்த்தமான நடிப்பு படத்தை அடுத்த லீடுக்கு எடுத்து சென்றுள்ளது. சொல்ல போனால் தரமான சம்பவத்திற்கு சிம்பு ரசிகர்களே தயாராகுங்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் படத்தோட இசை வெளியீட்டு விழா இந்த மாதத்தின் இறுதியில் நடக்க இருக்கிறது என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Here's The Moment!
The Thundering arrival of #AGR
The power-packed #PathuThalaTeaser
is out now!🔗https://t.co/VwwmtuRcMg#PathuThala #Atman #SilambarasanTR #PathuThalaFromMarch30
Worldwide #StudioGreen Release💥
— Studio Green (@StudioGreen2) March 3, 2023