‘அது நடந்துடும்னு பயந்து தான் கல்யாணத்துக்கு நோ சொல்றேன்’ – சிம்பு ஓபன் டாக்!

0
simbu
39 வயதில் நடிகர் சிம்புவுக்கு வந்த வினோத பயம் - அதான் இதுவரைக்கும் திருமணம் பண்ணலையாம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, 39 வயதாகி இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

சிம்பு வெளிப்படை :

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. தற்போது இவர் தனது, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற 15ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் விழாவில் பங்கேற்ற சிம்பு பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார். 19 வயது முதல் ஒரு இளைஞன் அவன் வாழ்க்கையில் அனுபவிக்கும் சிக்கல்களை 3 கட்டமாக இந்த படத்தில் நடித்துள்ளேன். ஒரு நடிகராக இன்னும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர்ந்து தனது திருமணம் குறித்து பேசிய அவர் எல்லா பெற்றோரைப் போலவே என் பெற்றோரும் என்னை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், எனக்கு அவசர கதியில் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. விசாரிக்காமல் திருமணம் செய்துவிட்டு கருத்து வேறுபாடு, சண்டை, விவாகரத்து என பிரச்சினைகள் வருமோ? என்ற பயத்தில் தான்  இதுவரை திருமணத்தை தள்ளி போட்டுள்ளேன். எனக்கான சரியான துணை வரும் வரை காத்திருப்பேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here