அட.. என்ன இப்படி சொல்லிட்டாரு.. கல்யாணம் குறித்து பெற்றோருக்கு அறிவுரை கூறிய நடிகர் சிம்பு!!

0

அண்மையில் நடந்த வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு சில கருத்துக்களை பேசியுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு:

தமிழ் சினிமா துறையில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இன்று வரை நடித்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றவர் தான் நடிகர் சிம்பு. இவரது தந்தை இயற்றிய காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து குத்து, மன்மதன், வல்லவன் மற்றும் மாநாடு போன்ற படங்கள் வெற்றி படங்களாக இவருக்கு அமைந்தது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கவுதம் வாசுதேவ் மேனன் – சிம்பு காம்போ கை கூடியுள்ளது.

இந்த படத்துக்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் நடந்த வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு சில கருத்துக்களை வழங்கியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, ‘பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கல்யாணம் செய்வதற்கு வற்புறுத்தாமல் இருக்க வேண்டும். மாலை பொருத்தம் வந்துவிட்டது என்று உடனடி திருமணத்தை நடத்தாதீர்கள்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவர்கள் விரும்பிய பின்னரே நடத்தி வையுங்கள், அதுமட்டுமின்றி அவர்களுக்கு பிடித்த நபரை திருமணம் செய்து வையுங்கள். மேலும் கடவுள் ஒருவன் இருக்கிறான் சரியான காலத்தில் சரியான நபரை அனுப்பி வைப்பார். அதுவரை அமைதியை கடைபிடிப்பது நல்லது’ என்று பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here