மீண்டும் கல்லா கட்டும் லிட்டில் சூப்பர் ஸ்டார்…!பல படங்களில் ஒப்பந்தமாகும் சிம்பு!!!

0

சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் காட்டியவர் நடிகர் சிலம்பரசன். இந்நிலையில் சமீபகாலமாக அவரின் உடல் எடை அதிகரித்ததால்  சினிமாவில் அவருக்கு மார்க்கெட் குறைந்தது. இந்நிலையில் தற்போது உடல் எடையை நன்கு குறைத்து சிலிம்மாக மாறியுள்ளார். இதனால் அவர் பல படங்களில் ஒப்பந்தமாகி  வருகிறார்.

தன்னுடைய தந்தை டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகர் சிலம்பரசன். அதன் பிறகு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர். அதை தொடர்ந்து அவரின் படங்கள் வசூல் சாதனையை குவித்து வந்தனர். தனக்கென ஒரு ஸ்டைல் என பல விதத்தில் தன்னை முன்னிலை படுத்தி கொண்டவர். இவரின் நடிப்பு, ஸ்டைல் என அனைத்தும் அவருக்கு நல்ல ரசிகர்கள் கூட்டத்தை தேடி தந்தது. மேலும் இவரை அனைவரும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கின்றனர். இவர் பன்முகத் திறமைகளுக்கு  சொந்தக்காரர் ஆவார்.

மேலும், சமீபகாலமாக அவரின் உடல் எடை அதிகரித்ததால் தமிழ் சினிமாவில் அவரின் மார்க்கெட் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது. இதனால் பல கேலி கிண்டலுக்கு ஆளானார். இந்நிலையில் தனது உடலை நன்கு குறைத்து மன்மதன் கால சிம்புவாக மாறி உள்ளார். இந்த மாற்றத்தினால் மீண்டும் அவருக்கு பட வாய்ப்பு வர தொடங்கி உள்ளது. அதாவது இயக்குனர் ராம் உடன் ஒரு படம், மிஷ்கினுடன் ஒரு படம், ஏஜிஎஸ் தயாரிக்கும் கே வி ஆனந்த் அவர்களின் கதையில் ஒரு படம் என கைவசம் படங்களை வைத்து உள்ளார். மேலும் ஒரு படத்திற்கு சம்பளமாக 10 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் உருவான  வெங்கட் பிரபுவின் மாநாடு படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here