ரஜினியை ஓவர்டேக் செய்து…எம்ஜிஆர்.. சிவாஜி..கமல் வரிசையில் இணைந்த நடிகர் சிம்பு!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்புவுக்கு, வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

சிம்புவுக்கு டாக்டர் பட்டம் :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்து, தற்போது வரை 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர், லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் வசூலை வாரி குவித்தது. தற்போது,வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிப்பு, இயக்கம் என பல்வேறு துறைகளில் இவர் சாதனை படைத்ததற்காக வருகிற ஜனவரி 11ஆம் தேதி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, தமிழ் சினிமாவில் இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை பெரும் 11 வது நபராக சிம்பு வளர்ந்துள்ளார். இந்த பட்டத்தை இதற்கு முன் பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு….எம். ஜி. ஆர் (1974), சிவாஜி கணேசன் (1986), கமல்ஹாசன் (2005), விஜயகாந்த் (2011), விஜய் (2007), பிரபு (2011), சின்னி ஜெயந்த் (2013), விக்ரம் (2011), நாசர் (2016), விவேக் (2005), சிம்பு (2022). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கூட இந்த பட்டம் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் சிம்பு இப்பட்டத்தை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here