அட., நம்ம சிம்புவுக்கு இப்படி ஒரு துரோகமா? அவரே கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

0
அட., நம்ம சிம்புவுக்கு இப்படி ஒரு துரோகமா? அவரே கொடுத்த அதிர்ச்சி தகவல்!!
அட., நம்ம சிம்புவுக்கு இப்படி ஒரு துரோகமா? அவரே கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனி புகழோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடித்து கடந்த ஆண்டு திரைக்கு வந்திருந்த ”வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது. மேலும் இதை தொடர்ந்து பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் புகழின் உச்சியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இவருக்கு பிரபல ஹீரோக்கள் இருவர் துரோகம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் சிம்புவை நடிக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்தினம் நினைத்திருந்தாராம். இது குறித்து சிம்புவிடமும் பேசியுள்ளாராம். ஆனால் சிம்பு நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என strict டாக ஜெயம் ரவி மற்றும் விக்ரம் ஆகியோர் சொல்லிவிட்டார்களாம். இதை அறிந்த சிம்பு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

IPL 2023: CSK க்கு வாய்ப்பு தருமா RCB?? ஹைதராபாத் அணிக்கு எதிராக நடக்க போவது என்ன??

இந்த விஷயத்தை பத்திரிகையாளர் அந்தணனிடம் சிம்புவே கூறியிருந்தாராம். மேலும் இது குறித்து PS- 1 னின் பட ப்ரோமோஷன் விழாவில் ஜெயம் ரவிடம் கேட்டதற்கு அவர் இதை மறுத்துவிட்டார். ஆனால் சிம்பு என்னிடம் கூறியது உண்மை என பத்திரிகையாளர் தற்போது உறுதியாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் PS- 2 promotion விழாவில் சிம்பு கலந்து கொண்டது என்பது அவரின் பெருந்தன்மையை வெளிப்படுத்தி உள்ளது என அவரது ரசிகர்கள் தங்களின் கருத்தை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here