சாய்னாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த் – பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர்!!

0

விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக பேசிய நடிகர் சித்தார்த் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

நடிகர் மன்னிப்பு:

அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நோவால் சோசியல் மீடியாவில் பிரதமருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். சாய்னாவுக்கு பதில் கருத்து அனுப்பிய நடிகர் சித்தார்த், அவரை கேவலமான வார்த்தைகளால் ஆபாசமாக விமர்சித்தார். மகளிரணி அமைப்பினர் உள்ளிட்ட பலருக்கும் நடிகரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவருக்கு பதிலளித்த சாய்னா, சித்தார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவர் ஏன் இவ்வாறு பேசினார் என தெரியவில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தனது செயலுக்கு வீராங்கனை சாய்னா நோவாலிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அவர் எனது மன்னிப்பு கடிதத்தை ஏற்பார் என நம்புகிறேன் என்று சமூக வலைத்தளங்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here