8 வருடங்கள் கழித்து நடிகர் சித்தார்த்துக்கு நிறைவேறிய கனவு – அரசே அளித்த முக்கிய அங்கீகாரம்!

0
8 வருடங்கள் கழித்து நடிகர் சித்தார்த்துக்கு நிறைவேறிய கனவு - அரசே அளித்த முக்கிய அங்கீகாரம்!

கடந்த 2014ம் ஆண்டு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத்தலைவன் படத்திற்கு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது.

காவியத்தலைவன்:

தமிழ் சினிமா துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சித்தார்த். இவர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். மேலும் இவர் நடித்த பாய்ஸ், ஜிகர்தண்டா போன்ற படங்கள் அவரின் கேரியரை முன்னோக்கி நகர்த்தியது. இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இவர் நடிப்பில் காவியத்தலைவன் என்ற திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

 

இந்நிலையில் காவியத்தலைவன் திரைப்படத்திற்கு ஒரு அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல திரைப்படங்களுக்கு அங்கீகாரம் தரும் விதமாக தமிழ்நாடு அரசு விருது வழங்குவது வழக்கம். தற்போது 2009-ம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான படங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விருது வழங்கும் விழாவில் அதிகமானோர் விருதை தட்டி சென்றனர். அதில் ஒருவர் நடிகர் சித்தார்த்.

அதாவது கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த காவியத்தலைவன் படத்திற்காக நடிகர் சித்தார்த்க்கு விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் சித்தார்த், ‘நான் விருது பெற காரணமான அப்படத்தின் படக்குழுவினருக்கு என்னுடைய நன்றிகள் மற்றும் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த இந்த அங்கீகாரம் மனதிற்கு சந்தோஷத்தை தருகிறது’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here