பாக்கியலட்சுமி சீரியலுக்கு டாடா காட்டி ஜீ தமிழ் தொடருக்கு வந்த முக்கிய பிரபலம் – பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

0
பாக்கியலட்சுமி சீரியலுக்கு டாடா காட்டி ஜீ தமிழ் தொடருக்கு வந்த முக்கிய பிரபலம் - பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சீரியலில், நடிகர் சாணக்யாவுக்கு பதிலாக பிரபல நடிகர் சாம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சூப்பர் அப்டேட்:

சீரியல்கள்  என்றாலே விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் டிவி சீரியல்கள் தான் எனும் அளவிற்கு நாள்தோறும் பல புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் புதிதாக கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சீரியல், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தனது வளர்ப்புத் தாயை வெறுக்கும், மகளின் கதைக்களத்தை வைத்து  இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீரியல், துஜ்சே ஹை ராப்தா என்ற பிரபல இந்தி தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் ஆதிரா கதாபாத்திரத்தில் மனிஷாஜித்தும் என்பவரும், திருமாறன் கதாபாத்திரத்தில் சந்தோஷும், அகிலன் கதாபாத்திரத்தில் சாணக்கியாவும் நடித்து வருகின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக சாணக்யா இந்த சீரியலில் இருந்து விலகியதால், சாம் என்ற நடிகர் இந்த தொடருக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் பாக்கியலட்சுமி சீரியலில், தெரப்பிஸ்ட் மருத்துவராக  கெஸ்ட் ரோல் செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது இவர் ஜீ தமிழுக்கு வந்துள்ளதை ரசிகர்கள் பலரும், பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here