‘எங்கேயும் எப்போதும்’ திரைப்பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்…, காதலியை கரம் பிடிக்கிறார்…,

0
'எங்கேயும் எப்போதும்' திரைப்பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..., காதலியை கரம் பிடிக்கிறார்...,
'எங்கேயும் எப்போதும்' திரைப்பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..., காதலியை கரம் பிடிக்கிறார்...,

தமிழ் மொழியில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஷர்வானந்த் தனது காதலியை கரம் பிடிக்க இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நடிகர் ஷர்வானந்த்

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷர்வானந்த். இவர் தமிழ் மொழியில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘கணம்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு தமிழ் ரசிகர்கள் உள்ளனர். தற்போது 38 வயதாகும் நடிகர் ஷர்வானந்த் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த தோனி.., முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியீடு…,

அதாவது, நடிகர் ஷர்வானந்த் தனது நீண்ட நாள் காதலியான ரக்ஷிதா ரெட்டி என்பவரை கரம் பிடிக்க இருக்கிறார். ரக்ஷிதா ரெட்டி ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் இன்று எளிமையாக நடைபெற்றுள்ளது. நடிகர் ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி ஆகியோரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here