இம்புட்டு கோடி இருந்தும் பணத்தோட மோகம் அடங்கல – ஷாருக்கானை கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!!

0
இம்புட்டு கோடி இருந்தும் பணத்தோட மோகம் அடங்கல - ஷாருக்கானை கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!!
இம்புட்டு கோடி இருந்தும் பணத்தோட மோகம் அடங்கல - ஷாருக்கானை கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யா கான் புதிய தொழில் ஒன்றை தொடங்கி அதில் கோடி கோடியாக பணத்தை அள்ளிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான்:

பாலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். அண்மையில் இவர் நடித்த பதான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. அடுத்தாக அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வரும் இவருக்கு ஆர்யா கான் என்ற மகன் இருக்கிறார். ஆர்யா கான் சமீபத்தில் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்து பார்ட்டி நடத்தி கைது ஆன சம்பவம் பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து புதிதாக D’YAVOL எனும் சரக்கு பிராண்டை ஆரம்பிக்க பல சீரியல் நடிகர்கள், நடிகைகளை வரவழைத்து பார்ட்டி நடத்தி தொடங்கி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து, D YAVOl X நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைனில் விற்பனையைத் துவங்கினார். இதற்கான விளம்பரப் படத்தில் ஆர்யா கானுடன் நடிகர் ஷாருக்கானும் நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்யா கான் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார்.

ஜோதிகாவை மலை போல் நம்பிய நடிகை.., கடைசில எனக்கு இந்த நிலையான்னு கதறிய பிரபல நாயகி!!

அந்த பதிவில் கூறியிருப்பதாவது, D YAVOl X இந்த பிராண்ட் நிறுவனத்தில் ஒரு டீ சர்ட்டின் விலை ரூ.24,000 க்கும், ஒரு ஜாக்கெட்டின் விலை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை அனைவரையும் வாயை பிளக்க வைத்தாலும், ஆன்லைனில் எல்லா ஆடைகளும் விற்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் மீண்டும் விற்பனை ஆரம்பிக்கும் என்று ஆர்யா கான் பதிவிட்டுள்ளார். இந்த அதிக விலைக்கு விற்றதை வைத்து பார்க்கும் பொழுது, கோடி கோடியாக பணம் இருந்தும், ஷாருக்கானுக்கு இன்னும் பணத்தின் மோகம் அடங்கவில்லை என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here