திரையரங்களில் வசூலில் வெளுத்து வாங்கிய ஷாருக்கானின் ”பதான்”..,இனி அமேசான் ott தளத்தில்!!

0
திரையரங்களில் வசூலில் வெளுத்து வாங்கிய ஷாருக்கானின் ''பதான்''..,இனி அமேசான் ott தளத்தில்!!
திரையரங்களில் வசூலில் வெளுத்து வாங்கிய ஷாருக்கானின் ''பதான்''..,இனி அமேசான் ott தளத்தில்!!

இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஷாருக்கான். பாலிவுட் திரையில் நாயகனாக நடித்து வந்த இவர் ”உயிரே” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிருந்தார். இதன் பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் அடுத்தடுத்து ஏகப்பட்ட ஹிட் படங்களை திரையுலகிற்கு கொடுத்து வந்த இவர், ஹிந்தி திரையின் சூப்பர் ஸ்டார் என்ற புகழுக்கு உரியவரானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் ”பதான்” என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இதை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்க, யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படம் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில், இப்போது வரை இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1048.30 கோடி வசூலை நிகழ்த்தி பெரும் சாதனை படைத்துள்ளது.

தலைக்கேறிய போதை.., அப்பா, அக்காவை சரமாரியாக வெட்டி கொன்ற ராஜா ராணி சீரியல் நடிகையின் மகன்!!

இப்படம் ஹிந்தி சினிமா மட்டுமல்லாது உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நேரத்தில் இப்படம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை இப்படக்குழு அறிவித்துள்ளது. அதாவது நாளை முதல் பதான் திரைப்படம் அமேசான் ப்ரைம் ott தளத்தில் வெளியாக உள்ளது. இதுவரை திரையரங்குகளில் கொண்டாடி வந்த பதான் இனி டிஜிட்டல் தளத்தில் ரசிகர்களால் கொண்டாட வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here