பாக்ஸ் ஆபிஸை எகிறவிட்ட பதான் படத்தின் வசூல்.., 4 நாளில் 400 கோடியை கடந்து சாதனை!!!

0
பாக்ஸ் ஆபிஸை எகிறவிட்ட பதான் படத்தின் வசூல்.., 4 நாளில் 400 கோடியை கடந்து சாதனை!!!
பாக்ஸ் ஆபிஸை எகிறவிட்ட பதான் படத்தின் வசூல்.., 4 நாளில் 400 கோடியை கடந்து சாதனை!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பதான் திரைப்படம்:

பாலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து வருபவர் தான் நடிகர் ஷாருக்கான். தற்போது இவர் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்கில் வெளியானது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் தீபிகா படுகோனே, சல்மான் கான், ஜான் ஆபிரகாம் டிம்பிள் கபாடியா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் .

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தீபிகா அணிந்திருந்த ஆடை பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் படக்குழுவினர் காதில் வாங்கிக்கொள்ளாமல் படத்தை ரிலீஸ் செய்தனர். ரிலீஸ் ஆன பிறகு படத்திற்கு இருந்த எதிர்ப்புகள் குறைய தொடங்கின. அதற்கு காரணம் படம் தேசபக்தியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால் தான். மேலும் இப்படம் வெறும் 225 கோடி செலவில் எடுக்கப்பட்ட பதான் திரைப்படம் முதல் நாளிலே 125 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இதுக்காக தான் நான் வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு போகல.., யோகி பாபு பேட்டி!!

இந்த நிலையில் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில், இப்படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இதுவரை எந்த ஒரு பாலிவுட் படமும் செய்யாத வசூலை பதான் திரைப்படம் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here