வாரிசுக்கு பிறகு ஷாமுக்கு எகிறும் மார்க்கெட்.., பிரபல இயக்குனருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!

0
வாரிசுக்கு பிறகு ஷாமுக்கு எகிறும் மார்க்கெட்.., பிரபல இயக்குனருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!
வாரிசுக்கு பிறகு ஷாமுக்கு எகிறும் மார்க்கெட்.., பிரபல இயக்குனருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!

வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் சாம் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாம்:

தமிழ் சினிமாவில் லேசா லேசா, இயற்கை, ஏபிசிடி, 6 போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் ஷாம். சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் அவருக்கு இரண்டாவது அண்ணனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் 11ம் தேதி வெளியாகி வசூலில் வெற்றி வாகை சூடி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தில் இருந்து சாம் மார்க்கெட் எகிற தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கி வரும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தளபதினாலே தாறுமாறுனு நிரூபிச்சுட்டாரு..,ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய  “தளபதி 67”!!

மேலும் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here