
நடிகர் சென்ட்ராயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆன்லைன் ரம்மி குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சென்ட்ராயன்:
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சென்ட்ராயன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து சென்ட்ராயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆன்லைன் ரம்மி குறித்து பேசியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பொதுவாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஜெயித்து எப்படியாவது அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இளைஞர்கள் கடனை வாங்கி லட்சக்கணக்கில் வைத்து ரம்மி விளையாடி ஏமாந்து வருகின்றனர். இதனால் வாங்கின கடனை திருப்பி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நாள் வரை 40க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
மேலும் இந்த விளையாட்டின் விளம்பரத்திற்காக சரத்குமார் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வந்தது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் சென்ட்ராயன் கூறுகையில், நான் ரம்மி, மங்காத்தா போன்ற படங்களை தான் பார்த்திருக்கிறேன். ஆனால் சீட்டுகட்டு அறவே பிடிக்காது, இது போன்ற விளையாட்டில் என்னை நடிக்க அழைத்தால் போக மாட்டேன். எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி போக மாட்டேன். மேலும் அந்த ரம்மி விளம்பரத்தை நான் பார்த்தது கூட கிடையாது என்று கூறியுள்ளார்.