நடிக்க வருவியா இனிமேல்.., வடிவேலு மாருலயே மிதிச்ச கவுண்டமணி.., உண்மையை போட்டு உடைத்த முக்கிய நடிகர்!!

0
நடிக்க வருவியா இனிமேல்.., வடிவேலு மாருலயே மிதிச்ச கவுண்டமணி.., உண்மையை போட்டு உடைத்த முக்கிய நடிகர்!!
நடிக்க வருவியா இனிமேல்.., வடிவேலு மாருலயே மிதிச்ச கவுண்டமணி.., உண்மையை போட்டு உடைத்த முக்கிய நடிகர்!!

நடிகர் வடிவேலுவை குறித்து சில அதிர்ச்சி தகவல்களை நடிகர் சிசர் மனோகர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆதங்கத்தில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகர் வடிவேலு:

தமிழ் சினிமாவில் தான் அடிவாங்கி மக்களை சிரிக்க வைத்தவர் தான் நடிகர் வடிவேலு. கடந்த 10 வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கினார். ஆனால் அதுவும் பிளாப் ஆனது. தற்போது மாமனிதன் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வரும் வடிவேலுவை பற்றி சக காமெடி நடிகர்கள் நெகட்டிவ் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீசர் மனோகர் சில அதிர்ச்சி தகவல்களை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் ராஜ்கிரண் சார் ப்ரொடக்சனில் ராசா மனசிலே படத்தில் வேலை பார்க்கும் போது தான் வடிவேலு வேலைக்கு வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரை பார்த்து கவுண்டமணி சார் யாரு இந்த பையன் புதுசா இருக்கு என்று கேட்டார். அதற்கு நான் புதிதாக நடிக்க வந்திருக்கிறார் என்று கூறினேன். அதன் பின்னர் ராஜ்கிரண் சாரை கவுண்டமணி சத்தம் போட்டார். அதற்கு ராஜ் கிரண் சார் ஒரு சீனு தான அண்ணே, அப்புறம் அனுப்பிடலாம் என்று கூறினார். மேலும் அந்த சீனில் கவுண்டமணி வடிவேலுவின் நெஞ்சில் மிதப்பது போல் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த சீனில் கவுண்டமணி சார் உண்மையாகவே நெஞ்சில் மிதித்தார். அதை வடிவேலு என்னிடம் சொல்லி அழுதார். அதன் பிறகு அவருக்கு சப்போர்ட்டாக உதவி செய்திருக்கிறேன். ஆனால் இப்போது அதெல்லாம் வடிவேலு மறந்துவிட்டார். சொல்லப்போனால் என்னுடைய பட வாய்ப்புகளை எல்லாம் அவர் தட்டி பறித்தார்.

மறைக்க ஒன்னு இல்ல.., இது தான் என் லவ்வர்.., பிறந்தநாள் அதுவுமா குண்டை தூக்கி போட்ட எதிர்நீச்சல் நடிகை!!!

பகவதி படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியது. அதையும் பிடுங்கினர். எதற்காக இப்படி செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அப்புறம் இம்சை அரசன் 23ம் புலிகேசியில் நடிக்க சிம்பு தேவன் என்னை அழைத்திருந்தார். அதில் 15 சீன்கள் மேல் நான் நடித்திருந்தேன். ஆனால் ஒரு சீனு தான் வந்துச்சு, அதையும் வடிவேலு தான் வேண்டாம் சொல்லிருக்காருனு இயக்குனர் மூலம் தெரிந்து கொண்டேன். எனக்கு மட்டும் 3 பெண் குழந்தைகள் இல்லாமல் இருந்திருந்தால் அப்பவே அவர் கதையை முடித்திருப்பேன். இப்படி வடிவேலு பற்றி சக காமெடி நடிகர்கள் பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here