ஆடி ஓடி ஒருவழியாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த காமெடி நடிகர் சதீஷ்.., என்ன சொன்னார் தெரியுமா?

0
என்ன பேச்சு இதெல்லாம்.., நடிகர் சதீஷை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி..,இணையத்தில் பரவும் வீடியோ!!
ஆடி ஓடி ஒருவழியாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த காமெடி நடிகர் சதீஷ்.., என்ன சொன்னார் தெரியுமா?

ஓ மை ஹோஸ்ட் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ் பேசிய ஆடை சர்ச்சை விவகாரம் குறித்து, வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓ மை ஹோஸ்ட்: 

நடிகை சன்னி லியோன் தமிழில் நடித்த திரைப்படம் தான் ஓ மை ஹோஸ்ட். இது தவிர நடிகர் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது சதீஷ் மேடையில் தர்ஷா குப்தா ஆடையை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சதீஷ் பேசியது தவறு என்று பாடகி சின்மயி, டாக்டர் சர்மிளா, சிங்கர் சீனிவாசன், மூடர் குளம் பிரவின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த ஆடை சர்ச்சை குறித்து நடிகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, தர்ஷா குப்தா நான் மாடர்ன் உடையில் வந்திருக்கேன், சன்னி லியோன் எப்படி வராங்கனு பார்க்கலாம் என்று என்னிடம் கூறினார். ஆனால் சன்னி பட்டு புடவை கட்டிட்டு வந்ததும் தர்ஷா குப்தா அப்செட் ஆயிட்டாங்க. அதன் பின்னர் நீங்கள் மேடையில் பேசும் போது நான் அப்செட்டா இருக்கேனு சொல்லுங்க என்று தர்ஷா குப்தா என்னிடம் கூறினார் என்று தெரிவித்தார்.

சைக்கிள் ரேஸின் போது மயங்கி விழுந்த சந்தியா.., அதிர்ந்து போன சிவகாமி.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

அவர் சொன்னதை நான் மேடையில் காமெடியாக பேசியது சர்ச்சையாகும் என நினைக்கவில்லை. மேலும் உடை உடுத்துவது பெண்கள் உரிமை என்று சிலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி பாடகி சின்மயி, டாக்டர் ஷர்மிளா, சிங்கர் சீனிவாசன், மூடர் குளம் பிரவின் ஆகியோருக்கு பணம் கொடுத்து படத்துக்கு புரமோட் பண்ணுகிறீர்களா? என்று போன் பண்ணி கேட்கிறார்கள். மேலும் நான் அதிக நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கேன், இதே போல் அனைவரும் பின்பற்றுங்கள் என்று கூறி தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here