பாக்கியாவை கழட்டிவிட்டு கோபிக்கு வந்த அவல நிலை.., கடைசியில் டீ ஆத்துன சம்பவம்!!!

0
பாக்கியாவை கழட்டிவிட்டு கோபிக்கு வந்த அவல நிலை.., கடைசியில் டீ ஆத்துன சம்பவம்!!!
பாக்கியாவை கழட்டிவிட்டு கோபிக்கு வந்த அவல நிலை.., கடைசியில் டீ ஆத்துன சம்பவம்!!!

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராதிகாவின் சூழ்ச்சியை தாண்டி கேட்டரிங் ஆடரை பெற்ற பாக்கியா அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மற்றொருபக்கம் பாக்கியாவின் ஸ்போக்கன் இங்கிலிஷ் க்ளாஸ் நண்பராக பழனிச்சாமி பழகிவருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகுவதை பார்க்கும் கோபி சந்தேகப்பட்டு பாக்கியாவை கண்காணிக்கிறார். இதுபோக பாக்கியாவிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளும் பழனிசாமி ஹீரோ ரேஞ்சில் நடித்து அசத்தி வருகிறார். இதனால் ஒருகாலத்துல ஹீரோவாக இருந்த கோபி தற்போது ஜோக்கர் போன்று நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

களத்தில் நின்ற 10 சஞ்சு சாம்சன்கள்…, மாறுபட்ட விதத்தில் ஜெர்சியை அறிமுகப்படுத்திய ராஜஸ்தான் அணி!!

இந்நிலையில் கோபியாக நடிக்கும் சதீஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் டீக்கடையில் இருந்து டீ ஆத்துவது போல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக ”கூடிய விரைவில் பாக்கியாவின் கேண்டீனில் டீ மாஸ்டராக சேரப் போகிறேன்” என நக்கலாக குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் ”கடைசியில் யாரும் இல்லாத கடைக்கு டீ ஆத்துற நிலைமைக்கு வந்துடீங்களே கோபி” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here