துணிவு பட கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர்.., வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சரத்குமார்!!

0
துணிவு பட கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர்.., வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சரத்குமார்!!
துணிவு பட கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர்.., வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சரத்குமார்!!

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் வெளியான போது ரசிகர் ஒருவர் இறந்த நிலையில், அவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து சரத்குமார் ஆறுதல் கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமார்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது போனிகபூர் தயாரிப்பில் வினோத் படைப்பில் உருவான துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி தற்போது வரை கலெக்சனை அள்ளி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் அதிகாலை 1 மணிக்கு முதல் ஷோ வெளியான போது அஜித்தின் ஏகப்பட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்து வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம், பேனர் கட் அவுட், டான்ஸ் என அலப்பறை கொடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி இறந்த ரசிகருக்கு துணிவு படக்குழுவினர் மற்றும் அஜித் ஆகியோர் எதுவும் செய்யவில்லை என்று இறந்த ரசிகரின் நண்பர்கள் வருத்தத்தில் கூறி வருகின்றனர்.

அந்த இளைஞன் இறந்து 5 நாட்கள் ஆன நிலையிலும் யாரும் வரவில்லை என்று குடும்பத்தினர் சோசியல் மீடியாவில் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சரத்குமார் இறந்த இளைஞனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் இப்படி விஜய் வாரிசு பட குழுவினர் ஆறுதல் கூறிய நிலையில் துணிவு பட குழுவினர் வராதது வருத்தம் அளிக்கிறது என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here