
நடிகர் சரத்குமார் தன் மகளுடன், பொது நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது அங்கிருந்த தொகுப்பாளினி சரத்குமார் வர்ணித்ததை பார்த்து மகள் வரலட்சுமி விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.
சரத்குமாருக்கு பங்கம் :
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் சரத்குமார். பொன்னியின் செல்வன் படத்தின் மிகப்பெரிய கேரக்டருக்கு பின், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சார்ந்த முக்கிய நிகழ்வுக்கு தன் மகள் வரலட்சுமி சரத்குமார் உடன் சென்று இருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்போது மேடையில் அமர்ந்திருந்த இவரை பேச அழைப்பதற்காக, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரின் ஒருவர் இவரை பயங்கரமாக வர்ணித்தார். அதாவது, ஒரே சூரியன் எங்களின் ஒரே நாட்டாமை, தமிழ்நாட்டுக்கு எப்படி ஒரு சூப்பர் ஸ்டாரோ அதேபோல், எங்களுக்கு நீங்க ஒரு சுப்ரீம் ஸ்டார்.
ரேஷன் கார்டில் இந்த updateஐ செய்யணுமா? வீட்டிலிருந்து ஈஸியா முடிக்கலாம்! எளிய வழிகள் இதோ!!
நமீதா முதல் நக்மா வரை அன்பால் நனைந்தவர், நனைவித்தவர் என்று அந்த தொகுப்பாளினி இவரை அறிமுகம் செய்ததும், மேடையில் அமர்ந்திருந்த வரலட்சுமி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். அதைப் பார்த்ததும் அருகில் இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். உடனே சரத்குமார் ஏன் இப்படி எல்லாம் பண்ற என்பது போல் சைகை காட்டி விட்டு, பேசுவதற்காக எழுந்து சென்றார். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.