கிண்டியில் மறைந்த நடிகர் சரத் பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது – கண்கலங்கிய திரையுலகம்!!

0
கிண்டியில் மறைந்த நடிகர் சரத் பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது - கண்கலங்கிய திரையுலகம்!!
கிண்டியில் மறைந்த நடிகர் சரத் பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது - கண்கலங்கிய திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சரத்பாபு. மேலும் தமிழ் மட்டுமின்றி அவர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட, செகண்ட் ஹீரோவாக நடித்த எல்லா படங்களும் வெற்றி வாகை சூடியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சொல்ல போனால் இவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த அண்ணாமலை, முத்து போன்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பை பெற்றது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்த, இவர் விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அம்மாடி.., குண்டாக இருந்த மஞ்சிமா மோகனா இது? இப்படி ஒல்லியா போய்ட்டாங்களே.., வீடியோ வைரல்!!

இதனை தொடர்ந்து சமீப காலமாக இவர் உடல்நல குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் . நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதி ஊர்வலம் தி.நகர் இல்லத்தில் இருக்கும் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கிண்டி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சரத்பாபுவின் உடல் பிற்பகல் 2.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here