நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி.. சோகத்தில் திரையுலகம்!!

0
நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி.. சோகத்தில் திரையுலகம்!!
நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி.. சோகத்தில் திரையுலகம்!!

பிரபல நடிகர் சரத்பாபு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சரத்பாபு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சரத்பாபு. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார். இவர் ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும், செகண்ட் ஹீரோவாக நடித்த எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

குறிப்பாக சொன்னால் இவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த அண்ணாமலை, முத்து போன்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பை பெற்றது. இவர் ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்த சரத்பாபு சமீப காலமாக உடல்நல குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா எதிரொலி: 3 ஆயிரத்தை கடந்து பயணிக்கும் அவலநிலை., 14 பேர் உயிரிழப்பு!!!

71 வயதுடைய சரத்பாபு வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடைசியாக சூர்யா நடித்த சிங்கம் 3ல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here