ரஜினி திரைப்பட நடிகர் சரத் பாபு திடீர் மரணம்….,அடுத்தடுத்த அதிர்ச்சி – சோகத்தில் திரையுலகம்….,

0
ரஜினி திரைப்பட நடிகர் சரத் பாபு திடீர் மரணம்....,அடுத்தடுத்த அதிர்ச்சி - சோகத்தில் திரையுலகம்....,
ரஜினி திரைப்பட நடிகர் சரத் பாபு திடீர் மரணம்....,அடுத்தடுத்த அதிர்ச்சி - சோகத்தில் திரையுலகம்....,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மனோபாலா மரணமடைந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோகம் மறைவதற்குள், பிரபல குணச்சித்திர நடிகர் சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, வேலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்தவர் சரத் பாபு. தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரம், வில்லன் என பல தோற்றங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவர்.

‘அந்த தருணம் நெஞ்சில் நினைவிருக்கிறது’….,மனோபாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்…..,

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பங்களிப்பை கொடுத்து வந்த நடிகர் சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அதாவது, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத் பாபு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இவரது திடீர் மரணம் தென் இந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here