சந்தானத்துக்கு போன் போட்ட அஜித்., அன்பு கட்டளையை ஏற்று முடிவை மாற்றிய காமெடி நடிகர்!!

0
சந்தானத்துக்கு போன் போட்ட அஜித்., அன்பு கட்டளையை ஏற்று முடிவை மாற்றிய காமெடி நடிகர்!!

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ஏகே 62 படத்தில், சந்தானம் இணைந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

வெளியான காரணம்:

நடிகர் அஜித், தனது துணிவு திரைப்படத்தை தொடர்ந்து, ஏகே 62 என்ற படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து அரவிந்த்சாமி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அது மட்டுமில்லாமல் நடிகர் சந்தானம் இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஹீரோவை தவிர வேறு எந்த வேடத்திலும் நடிக்க மாட்டேன் என, முடிவு செய்திருந்த சந்தானம் இந்த படத்தில் எப்படி நடிக்க ஒத்துக் கொண்டார் என பலரும் கேள்வி எழுப்பினர்.

விரைவில் காக்க காக்க 2 படப்பிடிப்பு துவக்கம்.., எப்போது தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!!

இது குறித்த, முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதலில் இதில் நடிக்க சந்தானம் மறுத்ததாகவும், அதன் பிறகு அஜித் நேரடியாக அவருக்கு போன் செய்து, ” நாம சேர்ந்து ஒர்க் பண்ணனும் ” என்று அன்பு கட்டளை போட்டதால் சந்தானம் இதற்கு ஒத்துக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here