பாலிவுட் திரையின் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான். தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்துள்ளார். பல கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஷாருக்கானே தயாரித்தும் இருக்கிறார். மேலும் நேற்று திரையில் வெளியாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் இதில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிப்பார் என்ற மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. எனினும் லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கும் சஞ்சய் தத் இதில் இப்படத்தில் என்ட்ரி கொடுத்து அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.