
கோலிவுட் திரையில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர்தான் எஸ்.ஜே. சூர்யா.ஆனால் கடந்த வருடம் வெளியான மாநாடு படத்தில் இவரது தரமான ரீஎன்ட்ரியினால் தற்போது இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவருக்கு தற்போது புது பிரச்சனை கிளம்பி உள்ளதாம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது சில வருடங்களுக்கு முன் இவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இவரால் நடிக்க முடியவில்லை. இதனால் அந்த பணத்தை இவர் திரும்பி கொடுத்ததற்கு, திரும்பி வாங்க ஞானவேல் மறுத்துவிட்டார். ஆனால் தற்போது சினிமாவில் ஏறுமுகம் காட்டிவரும் எஸ்.ஜே.சூர்யாவின் வளர்ச்சியை பார்த்த ஞானவேல், தன்னுடைய படத்தில் நடித்து கொடுக்குமாறு சமீப நாட்களில் கேட்டுள்ளார்.
வடக்கன்ஸ்க்கு ஆதரவாக, தமிழரை தாழ்த்தி பேசிய அனிதா குப்புசாமி? இதெல்லாம் உங்களுக்கு தேவையா?
அதற்கு இவர், இப்பொழுது சினிமாவில் நான் என்ன சம்பளம் வாங்குகிறேனோ அதே சம்பளத்தை நீங்கள் கொடுத்தால் இந்த படத்தில் நடிக்க நான் தயார் என கூறியுள்ளார்.அதற்கு மறுத்த ஞானவேல், தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வட்டியோடு திரும்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் இந்த விஷயத்தால் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரெட் கார்டு போடப்படும் அபாயம் கூட இருப்பதாக சொல்லப்படுகிறது. வடிவேலுவின் நிலை இவருக்கும் வந்துவிடுமோ என்று ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.