“தளபதி 68″யை ஆர் ஜே பாலாஜி எடுக்கிறாரா? இதுகுறித்து அவரே கொடுத்த விளக்கம்!!

0
"தளபதி 68"யை ஆர் ஜே பாலாஜி எடுக்கிறாரா? இதுகுறித்து அவரே கொடுத்த விளக்கம்!!

ஆர் ஜே பாலாஜி தளபதி விஜய்யின் அடுத்த படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆர் ஜே பாலாஜி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தொகுப்பாளர் என பல துறைகளில் பிசியாக இருந்து வருபவர் தான் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த எங்க வீட்ல விசேஷம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடித்த ரன் பேபி ரன் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி வெற்றி வெற்றி நடை போட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கிய கோகுல் படைப்பில் உருவாகி வரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார். இது குறித்து அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, நான் தளபதிட்ட கதை சொல்லும் போது அவர் எனக்கு ஒரு மணி நேரம் டைம் கொடுத்தார்.

தமிழகத்தில் இவர்களுக்கான மின் கட்டணம் குறைப்பு., கோரிக்கையை ஏற்று அரசு அதிரடி முடிவு!!

அந்த ஒரு மணி நேரத்தில் நான் சொல்லும் கதை அவருக்கு பிடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் கதையை கூறினேன். அவருக்கு நான் சொன்ன கதை பிடித்துவிட்டது. இருந்தாலும் பின்னாடி பண்ணலாம் என்று கூறினார். அவர் கூறிய டைமில் நான் நடிக்க இருக்கும் படங்கள் இருந்தன. அதையும் அவரிடம் சொன்னேன். அப்ப future ல பண்ணலாம் என்றும், கதை இருந்தால் கொண்டு வாங்க என்று விஜய் கூறியதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here