சினிமால யாரையும் போட்டி போட நினைக்கல..,எனக்கான பாதையில போயிட்டுருக்கேன்.., ஆர் ஜே பாலாஜி பேட்டி!!

0
சினிமால யாரையும் போட்டி போட நினைக்கல..,எனக்கான பாதையில போயிட்டுருக்கேன்.., ஆர் ஜே பாலாஜி பேட்டி!!
சினிமால யாரையும் போட்டி போட நினைக்கல..,எனக்கான பாதையில போயிட்டுருக்கேன்.., ஆர் ஜே பாலாஜி பேட்டி!!

ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக இருந்து வருபவர் தான் ஆர்ஜே பாலாஜி. அந்த வகையில் இவர் இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது. தற்போது ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ரன் பேபி ரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அது போக ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள், ஆர்.ஜே.பாலாஜி, ஹரீஷ் பேரடி, மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தை குறித்து ஆர் ஜே பாலாஜி பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, நான் இதற்கு முன் நடித்த இரண்டு படங்களும் வேறு வேறு கதைக்களம். குறிப்பாக LKG அரசியல் படம், மூக்குத்தி அம்மன் ஆன்மிகம் திரைப்படம், வீட்ல விசேஷம் குடும்ப படம் என வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறேன்.

SRI படம் குறித்து மனம் திறந்த நடிகை ஜோதிகா.., இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!!

ஏனென்றால் ஒரு இமேஜுக்குள் அடங்கிவிட கூடாது என்பதற்காக தான். தற்போது நான் நடத்து வரும் ரன் பேபி ரன் திரைப்படம் திரில்லர் கதைக்களத்தை கொண்டது. இப்பொழுது ரசிகர்கள் எல்லாரும் திரில்லர் படத்தையே விரும்புகிறார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். மேலும் நான் சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டி போடுகிறேன் என்று கூறுகிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது, நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.

மேலும் நான் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எனவே என்னுடைய சினிமா பயணம் நீண்ட தூரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். அதுமட்டுமின்றி LKG மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களின் 2 பாகம் கூடிய விரைவில் எடுப்பேன். தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து எனக்கு மைக்கேல் மதன காமராஜன் மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை உள்ளது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here