முதலமைச்சர் பற்றிய அவதூறு பேச்சு – நடிகர் ரன்தீப் ஹூடா ஐ.நா ஒப்பந்தத்தின் தூதர் பதவியிலிருந்து நீக்கம்!!

0

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருக்கு எதிராக அவதூறு பேசியதால் நடிகர் ரன்தீப் ஹூடா ஐ.நா ஒப்பந்தத்தின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.

நடிகர் ரன்தீப் ஹூடா:

பிப்ரவரி 2020 இல் புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கான சிஎம்எஸ் தூதராக ஹூடா நியமிக்கப்பட்தார். முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி பற்றி ரன்தீப் ஹூடா கூறிய அவதூறான நகைச்சுவை தற்போது வைரலாகியது. அந்த வீடியோவில் கூறப்பட்ட கருத்துக்கள் முன்னாள் முதல்வர் மாயாவதி அவர்களை தாக்கி பேசி இருப்பது போலவும் , “சாதி மற்றும் பாலியல்” குறித்து பேசியுள்ளதால் அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக சி.எம்.எஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வீடியோவில் உள்ள கருத்துகளை “தாக்குதல்” என்று அமைப்பு கண்டறிந்துள்ளது. மேலும் ரந்தீப் ஹூடா இனி அவர்களுக்கான தூதராக பணியாற்ற மாட்டார் எனவும் கூறியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து நடிகர் ரன்தீப் ஹூடா மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வந்துகொண்டுள்ளது. தற்போது இச்சம்பவத்தால் நடிகர் ரன்தீப் ஹூடா ஐ.நா ஒப்பந்தத்தின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here