கோலியாக நடிக்கும் ராம்சரண்….,இது நல்லா இருக்கே….,

0
கோலியாக நடிக்கும் ராம்சரண்....,இது நல்லா இருக்கே....,
கோலியாக நடிக்கும் ராம்சரண்....,இது நல்லா இருக்கே....,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகர் ராம்சரண் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை படம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம்சரண். கடந்த 2007 ஆம் ஆண்டு ‘சிறுத்தை’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்றது கவனிக்கத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

‘இங்க எவன் வாழனும், எவன் ஆளனும்னு நான் தான் முடிவு பண்ணனும்’…,’பத்து தல’ ட்ரைலர் ரிலீஸ்…,

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகர் ராம்சரண் தெரிவித்துள்ளார். அதாவது, ‘விளையாட்டை மையமாக கொண்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு விருப்பம். விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். நான் கோலியை போல தோற்றம் கொண்டிருப்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க பொருத்தமாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here