
பிரபல நடிகர் ராமராஜன் முதல் முதலாக தொலைக்காட்சியில் கலந்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் ராமராஜன்:
தமிழ் சினிமாவில் 80,90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு இணையாக படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் தான் நடிகர் ராமராஜன். இயக்குனராக தனது கேரியரை தொடங்கி, அதன் பின் ஹீரோ அவதாரம் எடுத்து நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் 100 நாட்கள் மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படம் தியேட்டரில் 400 நாட்களுக்கு மேல் வெற்றி வாகை சூடி மக்களின் நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். இயக்குனர் ராகேஷ் படைப்பில் உருவாகும் சாமானியன் நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுபோக இப்படத்தில் ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் லீடு ரோலில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் ராமராஜன் முதல் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதாவது, விஜய் டிவியில் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு? சாம்பியன்ஸ் சீசன் – 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அமுதவாணன், மதுரை மரிக்கொழுந்து வாசம் என்ற பாடலுக்கு ராமராஜன் முன் நடனமாடி காட்டுகிறார்.
அத பின்னர் ராமராஜனிடம் நீங்க இந்த பாட்டுக்கு எத்தனை தடவை ஆடினீர்கள் என்று கேட்க, ஒரு முறை தான் ஆடினேன் என்று சிரித்து கொண்டே பதில் கூறினார் ராமராஜன். அதற்கு இவன் இந்த பாட்டுக்கு 3000 தடவைக்கு மேல் ஆடியுள்ளான் என்று அமுதவாணனை பழனி பட்டாளம் கிண்டலடிக்க, நான் இந்த பாட்டுக்கு ஆடி ஊருல ஒரு வீட்டையே கட்டிட்டேன் என்று அமுதவாணன் கூற அரங்கமே அதிர்கிறது. மேலும் அமுதவாணனின் திறமைக்கு பரிசாக ராமராஜன் கையில் போட்டு இருந்து R எழுத்து கொண்ட மோதிரத்தை அமுதவாணன் விரலில் மாட்டி விடுவது போல் ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.