ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லையா?? தமிழருவி மணியன் விளக்கம்!!

0
actor rajinikanth
actor rajinikanth

நேற்று நடிகர் ரஜினிகாந்த் தான் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதாகவும், அதற்கான அறிவிப்பினை வரும் 31 ஆம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இப்படியான நிலையில் ரஜினிகாந்த் தான் முதல்வர் வேட்பாளராக இந்த தேர்தலில் போட்டிடுவாரா? என்பது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்தின் புதிய கட்சி:

அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் களம் தற்போது தான் சூடு பிடித்துள்ளது. காரணம், பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் கட்சி துவங்குவாரா? மாட்டாரா? என்பது குறித்த கேள்விக்கு நேற்று தான் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தான் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் புதிய கட்சி ஜனவரி மாதம் துவக்கப்படும் என்றும் அது குறித்த அறிவிப்பினை வரும் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவரது ரசிகர்கள் முதல் அவரது ஆதரவாளர்கள் வரை பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டதும் பலரிடம் இருந்து பல விதமான காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன, இப்படியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நேற்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி என்பவரை நியமித்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்தார்.

அரியர் தேர்வுகள் நடைபெறுமா?? ரத்து செய்யப்படுமா??

இன்று கட்சி மேற்பார்வையாளரான தமிழருவி மணியன் செய்தியரகளிடம் பேசியபோது, “ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டே 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார். தற்போது அதனை செய்தும் காட்டி உள்ளார். அதே போல் அவரால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத ஆட்சியினை தமிழகத்தில் அமைக்க முடியும். அவர் கட்சி ஆரம்பித்தாலும் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கமாட்டார். அவர் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமும், பார்க்கலாம். அவரையும் என்னையும் பிரிக்க பலரும் சதி செய்கின்றனர்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here