‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ‘லால் சலாம்’. நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்திற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சம காலத்திற்கு தேவையான விளையாட்டு அரசியல் பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நிச்சயமாக ஐஸ்வர்யாவின் சிறந்த படைப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த திரைப்படம் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரின் கேரியரில் பேசப்படக்கூடிய முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று கணிப்புகள் எழுந்துள்ளது. இப்படி மக்களின் எதிர்பார்ப்புகளை தூண்டக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here