என்னது., வேட்டையன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தானா? லீக்கான அப்டேட்!!

0
என்னது., வேட்டையன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தானா? லீக்கான அப்டேட்!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன், அன்று முதல் இன்று வரை ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை ரித்திகா சிங், துஷாரா விஜயன், அமிதாப் பச்சன் மற்றும் ஃபஹத் பாசில் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் அண்மையில் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அண்மையில் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இன்று முதல் 15 நாட்கள் ஹைதராபாத்தில் ஷூட்டில் எடுக்கவுள்ளனராம். மேலும் இப்படப்பிடிப்பில் ரஜினியின் போலீஸ் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here