தந்தையின் படத்தை இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த் – நீண்ட இடைவெளிக்கு பிறகு கமிட்டான காம்போ!!

0

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினியின் மற்றொரு படத்தை இயக்க உள்ள இயக்குனர் சிவாவின் திரைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய காம்போ:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் அண்ணாத்த.  கதை ரீதியாக இந்த படம் வெற்றி அடையவில்லை என்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது.  இந்த படத்தை அடுத்து, இயக்குனர் சிவா ரஜினிகாந்தை வைத்து மற்றொரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தை தயாரிக்க, ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2010, கோவா என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்த இவர், தற்போது 12 வருடங்கள் கழித்து தனது தந்தையின் படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here