இளம் இயக்குனரை கழட்டி விட்டுட்டு, 90ஸ் இயக்குனருடன் கைகோர்த்த சூப்பர் ஸ்டார்., காரணம் இதானா?

0
இளம் இயக்குனரை கழட்டி விட்டுட்டு, 90ஸ் இயக்குனருடன் கைகோர்த்த சூப்பர் ஸ்டார்., காரணம் இதானா?
இளம் இயக்குனரை கழட்டி விட்டுட்டு, 90ஸ் இயக்குனருடன் கைகோர்த்த சூப்பர் ஸ்டார்., காரணம் இதானா?

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஸ்டைலிங் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் ரஜினி indro வீடியோ வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமன்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது. இப்படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி எடுக்க இருந்த நிலையில், அவரை விலக்கி லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

காந்தாரம் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.., ரிஷப் ஷெட்டிக்கு கமல்ஹாசன் கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ் !!

இந்நிலையில் அவரிடமிருந்தும் விலகி வேறொரு இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக சமூக வலைதளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்த பி வாசு படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், இப்படத்தின் பார்ட் 2வில் ரஜினி நடிக்க மறுத்த நிலையில், தற்போது பி வாசுவுடன் ரஜினி இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here